மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்தும் அதை ஏற்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறுத்துவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
இந்த தேர்தலில் பாலிவுட் நடிகைகள் ஹேமமாலினி, ராக்கி சாவந்த், குல் பனாக், கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் அக்ஷய் குமாருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. அவர் தான் தயாரித்துள்ள ஃபக்லி படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.
அக்ஷய் காங்கிரஸ் சீட்டை ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது சொந்த ஊரான டெல்லி சாந்தினி சவுக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்திருப்பார்.
சாந்தினி சவுக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் அங்கு போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.
முன்னதாக அக்ஷயின் மாமனார் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா 1992ம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment