டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!

|

மும்பை: சினிமாைவை விட டிவி கிரிக்கெட் வர்னணை நிகழ்ச்சி ஒன்றிற்கு 'அமர்க்களமான' ஆடைகள் அணிந்து வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்த்ரா பேடி.

டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!

இவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பிரவேசம் செய்ய இருக்கிறார். இம்முறை சற்று வித்தியாசமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்குகிறார் மந்த்ரா. அதுவும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக.

இது தொடர்பாக மந்த்ரா கூறுகையில், ‘ எனக்கும் நகைச்சுவைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் இந்நிகழ்ச்சியின் நடுவராக பங்கு பெறுவது எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல், இந்த காமெடி நிகழ்ச்சியின் மற்றொரு ஜட்ஜாக பிரபல நடிகை ரவீணா டாண்டன் இடம் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Post a Comment