அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
மனோரமாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. முழுமையாக சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகும் அவர் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார்.
திரையுலகினர் பலரும் அவரை நலம் விசாரித்தனர்.
Post a Comment