ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தடை!

|

ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த, ராஜசேகர் என்பவர், சென்னை பெருநகர மூன்றாவது உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுவில், '8 பாயிண்ட்' நிறுவனத்தை சேர்ந்த அருமை சந்திரனும், நானும் சேர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் - நீலம் உபாத்யாயா நடிக்க, 'ஓம் சாந்தி ஓம்' படம் தயாரித்தோம்.

ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தடை!  

படத்தை சூரிய பிரபாகர் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும், செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையும், சாட்டிலைட் உரிமையும் எனக்கு தரப்பட்டு, இதற்காக முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி, செங்கல்பட்டு ஏரியா மற்றும் சாட்டிலைட் உரிமைகளை, வேறு நபருக்கு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இதனால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும்,' என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 8ம் தேதி வரை, 'ஓம் சாந்தி ஓம்' படத்தை வெளியிடக்கூடாது, என இடைக்காலத் தடை விதித்தார்.

 

Post a Comment