விவேக் ஹீரோவாக நடித்துள்ள நான்தான் பாலா படத்தைப் பார்த்த கவுதம் மேனன், விவேக்கைப் பாராட்டியுள்ளார்.
டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நான்தான் பாலா'. இந்த படத்தில் நாயகனாக புதிய பரிமாணத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கண்ணன் இயக்கியுள்ளார். வெங்கட் க்ரிஷி என்பவர் இசையமைக்கிறார். மணவாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது நான்தான் பாலா. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
படமும், விவேக்கின் நடிப்பும் சிறப்பாக இருந்ததாக அவர் விவேக்கிடம் தெரிவித்துள்ளார்.
பாலக்காட்டு மாதவன் என்ற படத்திலும் விவேக் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப் படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அந்த வகையில் இது விவேக்குக்கு ஸ்பெஷலான ஆண்டு. ஒரே ஆண்டில் அவர் ஹீரோவாக நடித்த இரு படங்களும் திரைக்கு வருகின்றனவே!
Post a Comment