லிப் டூ லிப் காட்சியில் நடித்து உதடுகளை ரத்தக்காடாக்கிய இளம் நடிகை

|

நியூயார்க்: முத்த காட்சியில் நடிக்க பல டேக்குகள் வாங்கிய நடித்து முடிப்பதற்குள் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனின் உதட்டில் ரத்தம் வரத் துவங்கிவிட்டது.

ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நோவா. அதில் எமமா டக்ளஸ் பூத்தின் மனைவியாக நடித்திருந்தார்.

லிப் டூ லிப் காட்சியில் நடித்து உதடுகளை ரத்தக்காடாக்கிய இளம் நடிகை

ஒரு காட்சியில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு பின்னர் உணர்ச்சியுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும். அந்த காட்சியை படமாக்க பல டேக்குகள் வாங்கியுள்ளனர்.

அப்படி டேக்குகள் வாங்கி காட்சியை நடித்து முடிப்பதற்குள் எம்மாவின் உதட்டில் ரத்தமே வந்துவிட்டது. மேலும் அவர்கள் மோதிக் கொண்டதில் ட்களஸின் மூக்கில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து எம்மா கூறுகையில்.

முதல் 4, 5 டேக்குகளின்போது நாங்கள் நன்றாக இருந்தோம். ஆனால் அதன் பிறகு தான் மோசமாகிவிட்டது. எனது உதட்டில் இருந்து ரத்தம் வரத் துவங்கியது. டக்ளஸின் மூக்கில் மோதிவிட்டேன். நாங்கள் இருவரும் டயர்ட் ஆகிவிட்டோம் என்றார்.

 

Post a Comment