சென்னை: உத்தம வில்லனின் இளைய மகளின் காதல் விவகாரத்தால் தனது படத்தின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று சுள்ளான் நடிகர் அஞ்சுகிறாராம்.
உத்தம வில்லனின் இளைய மகள் இயக்குனர் ஆகும் ஆசையில் மும்பை சென்று இந்தி படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நம்ம ஊர் சுள்ளான் நடிகரின் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
நடிகைக்கும் அவரது அப்பாவுடன் நடித்த இரண்டு எழுத்து நடிகையின் மகனுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இந்த நடிகையின் காதல் விவகாரத்தால் எங்கே தனது படத்தின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று சுள்ளான் அஞ்சுகிறாராம்.
சுள்ளான் நடிகரின் முதல் இந்தி படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்ததுடன் அவருக்கு பெரும் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment