அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்

|

சென்னை: அஜீத்தின் ஒளிவு மறைவற்ற மனசும், விஜய்யும் அமைதியும் எனக்குப் பிடிக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.

இன்று ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, இன்றைய நாயகர்கள் அத்தனை பேருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்களைப் பற்றி அவ்வளவு பெருமையாக அனைத்து மேடைகளிலும் பேசுகிறார்கள்.

அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்

நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. குறிப்பா அஜீத், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் உங்கள் பாணியில் நச்சென்று சொல்லுங்க சார்... இது அவர்கள் ரசிகர்கள் அத்தனைப் பேருக்கும் அப்படி இருக்கும்..!" என்று கோரிக்கை வைத்தார் அஜீத்.

அதற்கு பதிலளித்த ரஜினி, 'அஜீத்திடம் எனக்குப் பிடித்தது அவரது ஒளிவு மறைவற்ற குணம். எதையும் மறைத்துப் பேசமாட்டார்.

விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி. நான் கேள்விப்பட்டிருக்கேன், செட்டில் கூட அவர் அவ்வளவாகப் பேசாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார் என்று. அது எனக்குப் பிடிக்கும்," என்றார்.

'அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ரஜினியின் பாராட்டு அத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்,' என்றார் பேட்டியெடுத்த விவேக்.

 

+ comments + 2 comments

Anonymous
15 April 2014 at 14:03

Rajni talked SINGLE WORD about AJITH.
Rajni talked SENTENCES in praise of VIJAY.
Nadanthathu nadanthapadi solllanum
mediaku thevai aappu

Anonymous
15 April 2014 at 14:05

correct
superstar was excited in talking baout vijay and vivek only stopped
even then Rajni spoke alot about vijay
ajakfanskku kaduppu

Post a Comment