மதுரை: இளையராஜா எங்கள் பெருமை, அவரது இசை நமது பாக்கியம் என பெருமிதப்பட்டார் இயக்குநர் பாலா.
மதுரையில் நடந்த இளையரஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் இடையிடையே நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரமுகர்களை அழைத்துப் பேச வைத்தனர்.
இதில் இயக்குநர் பாலா பேசுகையில் இளையராஜாவை தன் தந்தைக்கு நிகராக வைத்துப் புகழ்ந்தார்.
கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு அப்பா, தாய். இசையாக அப்பா பிறந்து இருக்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?" என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது, ‘‘நான் அடுத்து பண்ணபோகிற படம் ‘தாரை தப்பட்டை' இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இது அவருக்கு ஆயிரமாவது படமாகும். நான் மதுரைகாரன். இப்படத்தில் மதுரைகாரன் சசிகுமார் நடித்துள்ளார். மதுரைகாரர் இசையமைத்துள்ளார். மதுரைகாரன் நான் டைரக்ட் செய்கிறேன்.
இதைவிட நான் என்ன பாக்கியம் செய்து இருக்க முடியும்.. இளையராஜா இந்த மண்ணின் பெருமை," என்றார்.
Post a Comment