நியூயார்க்: ஆஸ்கர் விருது விழாவில் மது அருந்தியதாக ஹாலிவுட் நடிகை ஆன் ஹாதவே தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை ஆன் ஹாதவே தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
என் பர்ஸ் சைஸில் ஒரு பிளாஸ்க் கிடைத்தது. உடனே நான் அதில் டக்கீலாவை ஊற்றி ஆஸ்கர் விருது விழாவுக்கு எடுத்துச் சென்றேன். விழா நடந்த இடத்தில் என்னை என் கணவர் நாங்கள் உட்கார வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பார்த்தால் எங்கள் அருகில் என் நண்பர் ஜோசப் கோர்டன் லெவிட் அமர்ந்திருந்தார்.
நான் டக்கீலாவை குடிக்க எடுத்தவுடன் லெவிட் அதை பார்த்துவிட்டு வேண்டாம், வேண்டாம் நடுக்கூடத்தில் வேண்டாம் என்றார். ஆனால் நான் நைசாக குடித்துவிட்டேன் என்றார்.
ஆஸ்கர் விருது விழாவுக்கு வரும் நடிகைகள் கையில் ஒரு குட்டி பர்ஸை எடுத்து வருவார்கள். ஆன் ஹாதவே அதில் மதுவை எடுத்து வந்துள்ளார்.
Post a Comment