சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை சிறந்த பொழுதுபோக்குப் பட விருதுக்குத் தேர்வு செய்துள்ளது நாகிரெட்டி நினைவு அறக்கட்டளை.
கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இமான் இசையமைக்க பொன்ராம் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் மார்க்கெட்டையும் ஒரேயடியாகத் தூக்கிவிட்டது.
இப்போது முதல் முறையாக விருதுகளைப் பெறவும் ஆரம்பித்துள்ளது.
மறைந்த திரையுலக ஜாம்பவான் நாகிரெட்டியாரின் நினைவாக ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு தோறும் சிறந்த படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படம் என்ற பிரிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாகிரெட்டி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
Post a Comment