சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதி வாரச்சாவடைந்த மேஜர் முகுந்தின் மகள் படிப்புச் செலவுகளை தான் ஏற்பதாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.
கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
உடனே அங்கிருந்து கிளம்பிவிடாமல், சிறிது நேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் விளையாடி மகிழ்வித்தார் விஜய்.
தன் தந்தை வீர மரணம் அடைந்தது புரியாமல் அவரது உடலுக்கு அந்த சிறுமி டாட்டா சொல்லி விடைகொடுத்த புகைப்படத்தைப் பார்த்து கலங்கிவிட்டதாக விஜய் தெரிவித்தார். அவர்களின் வீட்டு விலாசத்தை விசாரித்து தெரிந்து கொண்ட விஜய் திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்களை ஆறுதல்படுத்தினாராம்.
முகுந்தின் மகளுடைய எதிர்கால கல்விச் செலவுகளை தாம் ஏற்பதாகவும் உறுதியளித்தாராம் விஜய்.
துப்பாக்கி படத்தில் ஜெகதீஸ் என்ற பெயரில் ராணுவ வீரராக விஜய் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment