லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார்.
ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள்.
கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார்.
அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் லாரன் இர்வின்.
லிங்கா படம் தனக்கு நிறைய இந்தியப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment