தென்காசி: ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தான் நடித்து வரும் சண்டமாருதம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் நேற்று மாலை குற்றாலம் ஐந்தருவியில் நிருபர்களை சந்தித்தார்.
அபோது அவர் கூறுகையில், "ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறேன்.
கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். ஆவணி மோடி, மீனாட்சி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ராதாரவி,சமுத்திரக்கனி,கன்னடநடிகர் அருன்சாகர்,தம்பிராமையா, கவுரவ வேடத்தில் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15தினங்களில் விடியல் படத்தின் பாடல்வெளியிட்டு விழா நடைப்பெறுகிறது.
தலைப்பாக்கட்டி
இந்தப் படத்துக்குப் பிறகு தலைப்பாக்கட்டி என்ற படத்தில் நடிக்கிறேன். தனுஷை வைத்து ஒரு படமும் தயாரிக்கும் திட்டம் உள்ளது," என்றார்.
தலைப்பாக்கட்டி ஓட்டல் விளம்பரத்தில் சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment