சென்னை: சாண்டல் நடிகரின் காமெடியாலேயே கூட சில முக்கிய நடிகளின் படங்கள் சில கல்லாக் கட்டியது. அந்தளவிற்கு நாயகனின் ‘நண்பண்டே' கேரக்டரில் வந்து அதகளப் படுத்தியிருந்தார் நடிகர்.
இதனால், சமீபத்திய படங்களில் ஹீரோக்களை விட அதிக முக்கியத்துவம் காமெடி நடிகரின் போர்ஷனுக்குக் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் வழக்கம் போல், ‘எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பது என தானும் நாயகனாக உருவெடுத்தார் காமெடி. அதன்படி, வேறு மொழியில் வந்த படத்தை ‘புல்' ஆயுதமாக மாற்றி வசூலித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தில் பல இடங்களில் லாஜிக் அடி வாங்கினாலும், படம் நன்றாகத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்படத்தால் தனது ‘மச்சி' நடிகர்கள் பலரது மீது கோபத்தில் இருக்கிறாராம் காமெடி.
காரணம் படத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று டண்டணக்கா தமிழில் ஆங்காங்கே வசனம் பேசும். அதற்கு டப்பிங் பேச முதலில் மச்சி நடிகர்களைத் தான் அணுகினாராம் சாண்டல். ஆனால், அவர்கள் கையை விரித்து விட கடைசியில் தான் இந்த வாய்ஸ் உறுதியானதாம்.
இதனால், படத்தில் பல்பு வாங்குவது போலவே நிஜத்திலும் சோகமாகிவிட்டாராம் சாண்டல். இனி தன் படங்களில் எவனுக்காகவும் பன்ச் பேச மாட்டேன்' என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறாராம்.
Post a Comment