கோச்சடையான் ரிலீஸ் - மகள் சவுந்தர்யா, குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

|

இன்று உலகெங்கும் கோச்சடையான் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாராட்டு மழை, மறுபக்கம் வசூல் மழை.

இந்த நிலையில் படம் வெளியானதையொட்டி படத்தின் இயக்குநரும் தன் மகளுமான சவுந்தர்யா ரஜினிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கோச்சடையான் ரிலீஸ் - மகள் சவுந்தர்யா, குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "என் மகள் சவுந்தர்யாவுக்கும், கோச்சடையான் குழுவுக்கும் வாழ்த்துகள்.. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "கோச்சடையான் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரஜினியை அழைத்து வாழ்த்து கூறியுள்ளனர்.

 

Post a Comment