பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்

|

மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பின்னணி பாடகர் அங்கித் திவாரிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்

பாலிவுட் பாடகாரன அங்கித் திவாரி(24) நண்பர்கள் மூலம் தனக்கு பழக்கமான 28 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கித் திவாரியை கடந்த 8ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் தன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி அங்கித் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

அங்கித் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக அங்கித் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment