சென்னை: நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவர் தங்கி இருந்த கோயமுத்தூருக்கே போய் சந்தித்து 'சினிமா' பற்றி பேசிவிட்டு வந்தவர் நடிகர் விஜய்.
தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவது உறுதியானதும், வாழ்த்து அறிக்கையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு விஜய்க்கு அழைப்பு அனுப்பியது பாஜக.
அவரும் டெல்லிக்குப் போகத் தயாரானார். ஆனால், இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தேமுதிக தவிர்த்த தமிழத்தின் அனைத்துக் கட்சிகளும் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
விழாவுக்கு அழைக்கப்பட்ட ரஜினியும் டெல்லி போகவில்லை. இந்த சூழலில் நாம் செல்வது சரியாக இருக்காது என்று விஜய்க்கு உடனிருந்தவர்கள் ஆலோசனை கூற, எடுத்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டார் விஜய் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
Post a Comment