நான் ரஜினி ரசிகன்தான்.. ஆனா கமல் படத்திலும் நடிக்கணும்! - சந்தானம்

|

சென்னை: அடிப்படையில் நான் ரஜினி ரசிகன்தான். ஆனாலும் கமல் ஹாஸனுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் சந்தானம்.

காமெடியன் சந்தானம், ஹீரோவாக புரமோட் ஆகியுளள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இந்தப் படம் சுமாராகப் போனாலும், இரண்டு முறை சக்ஸஸ் பார்ட்டி வைத்து வெற்றிப் படம் என உறுதி செய்து கொண்டார்கள்.

நான் ரஜினி ரசிகன்தான்.. ஆனா கமல் படத்திலும் நடிக்கணும்! - சந்தானம்

படம் வெளியான பத்து நாட்கள் கழித்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சந்தானம்.

படம் மிகப் பிரமாதமான வெற்றி கிடைத்ததாகக் கூறிய அவரிடம், ரஜினியின் லிங்கா படத்தில் நடிப்பது குறித்து கேட்டோம்.

லிங்காவில் நடிக்கிறேன்

அவர் அளித்த பதிலில், "நான் ரஜினி சாரின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்' படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இப்போது, ‘லிங்கா' படத்திலும் நடிக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்," என்றார்.

கமலுடன்

கமல் ஹாசனுடன் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, "நான் ரஜினி ரசிகராக இருந்தாலும், கமல் ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்றார்.

சம்பளம் பேசுவதில்லை

'சந்தானம் என்னிடம் சம்பளம் பற்றி பேசுவதே இல்லை' என்று இயக்குநர் சுந்தர் சி. கூறியது குறித்து கேட்டபோது, "அது உண்மைதான். அவரிடம் மட்டுமல்ல. இன்னும் சிலரிடம் கூட, இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். சிலரிடம் வாங்காமலும் இருந்திருக்கிறேன்," என்றார்.

 

Post a Comment