கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

|

மும்பை: கோச்சடையான் படம் பெரிய ஹிட்டானதில் மகிழ்ச்சி. ஆனால் முழுக்க முழுக்க லைவ் ஆக்ஷனில் ரஜினியுடன் தமிழ்ப் படம் நடிக்கக் காத்திருக்கிறேன் என்றார் நடிகை தீபிகா படுகோன்.

தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான். அதற்கு முன் அவர் ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வந்தார். இந்தி, தெலுங்கு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை.

கோச்சடையான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் படத்தில் தீபிகா படுகோன் உருவம் சரியாக வரவில்லை என்று மீடியா விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர். தீபிகா ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து தீபிகாவிடம் கேட்டபோது, "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அனிமேஷனில் இந்த அளவு கொண்டு வருவதே பெரிய விஷயம்தான்.

காரணம், ஹாலிவுட் அனிமேஷன் படங்களில், உயிரோடு உள்ள ஒரு பெரிய நடிகர் நடிகையை யாரும் அனிமேட் செய்ததில்லை. அதனால் நமக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கோச்சடையானில் நடித்த ரஜினி சார், நான் உள்ளிட்ட மற்ற அனைவரும் வாழும் பாத்திரங்கள். எங்களின் அனிமேஷன் உருவத்தோடு நிஜ உருவத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் இந்தப் பிரச்சினை. எனக்கு அது புரிகிறது. சவுந்தர்யா அருமையான முயற்சியை எடுத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

இன்னொரு படத்தில் லைவ் ஆக்ஷனில் ரஜினி ஜோடியாக நடிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.

 

Post a Comment