சிம்பு படங்கள் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். படம் முடிந்ததா, வெளிவருமா என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்தான்.
இன்றைய தேதிக்கு அவர் நடிக்கும் நான்கு படங்கள் வாலு, வேட்டை மன்னன், கவுதம் மேனன் படம் மற்றும் இது நம்ம ஆளு... ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. எப்போது வருமென்று தெரியாது.
திடீர் திடீரென இந்தப் படங்களை தூசி தட்டுவார்கள், அப்புறம் திடீரென கிடப்பில் போட்டு விடுவார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும் நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த படம் இது நம்ம ஆளு. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பாக செய்திகள் வந்ததோடு சரி. திடீரென ஒரு நாள் படம் நின்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்துள்ளது இந்தப் படத்துக்கு. வேக வேகமாக படத்தை எடுத்து முடித்து வெளியிடப் போகிறார்களாம்.
இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி ராஜேந்தர் தயாரிக்கிறார், சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தை இப்போது முடித்தாலும், வாலு படம் வெளியான பிறகுதான் வெளியிடப் போகிறார்களாம்.
Post a Comment