டெல்லி: ரஜினிகாந்த் எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டுள்ளார் என்று அவரது மனைவி லதா தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் வழக்கமான எந்த ஒரு சினிமாவிலும் நடித்து பெயரும், புகழும் பெறலாமே, எதற்காக அனிமேசன் போன்ற புது முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் ரஜினியை பொறுத்தளவில் புதிதாக எதையாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உழைக்கிறார். தனது புகழ் மிக்க பெர்சனாலிட்டியை, புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்ய அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
அவதார் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை நமது நாட்டு மக்களுக்கான பயன்பாட்டுக்கு கொண்டுவர தனது புகழை அவர் பயன்படுத்துகிறார். இந்த படத்தில் நடித்தது அவருக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசும் வசனங்கள், டயலாக்குகள் மக்களின் வாழ்க்கையில் ஒத்துப்போகிறது. ரஜினி மந்த்ரா என்ற பெயரில் பள்ளிகளில் மேலாண்மை பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றார் லதா ரஜினிகாந்த்.
Post a Comment