சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க பங்கு விவகாரம்தான் நால்வரில் ஒருவர் நகர்த்தப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஒருவராக இருந்தவர் மீதே நடவடிக்கை பாய என்ன காரணம் என்பதை கதை கதையாக கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
மாம்பழ வேட்பாளரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டும் அதை சரிவர கவனிக்காமல் சாதிப் பாசத்தை காட்டினார் என்று செல்போன் ஆதாரத்தோடு மேலிடத்தில் போட்டு கொடுத்துவிட்டனராம்.
இதுதான் தோல்விக்குக் காரணம் என்று பற்ற வைத்தாலும், சென்னை மாநகராட்சியில் ஒரு டெண்டர் தொடர்பான விஷயத்தில் மேலிடத்துக்கு பங்கு சரிவர போய் சேரவில்லையாம் இதுதான் கோபத்திற்குக் காரணம் என்கின்றனர்.
கடந்த 18ம் தேதி மாலையில்தான் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மூன்று பேரை உள்ளே வெளியே போட்டு தாக்கிய தலைமை சாமியானவரிடம் இருந்து வெயிட்டான துறையை பறித்துவிட்டு டம்மி துறையை கொடுத்தனர்.
பதவி போகலையே என்ற சந்தோஷத்தில் இருந்த நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து நீக்கியது தலைமை.
சரி, மாவட்டச் செயலாளர் பதவியாவது தப்பியதே என்று எண்ணியவரின் தலையில் 20ம்தேதி மதியம் இடியை இறக்கியது தலைமை, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கப்பட்டார். மாசெ பதவி போனாலும் பரவாயில்லை, அமைச்சர் பதவியாவது மிஞ்சியதே என்று திருப்தி அடைந்தார் சாமி.
ஆனால் அதுவும் கொஞ்ச நேரத்திலேயே பறிக்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் சாமியின் ஆதரவாளர்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் சாமிக்கு இது போதாத காலம் என்கின்றனர்.
Post a Comment