மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

|

கடந்த வாரம் வெளியான மனம் தெலுங்குப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

மறைந்த ஏ நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, மருமகள் அமலா, பேரன்கள் நாக சைதன்யா, அகில் என குடும்பமே நடித்த படம் இந்த மனம். சமந்தா, ஸ்ரேயாவும் நடித்துள்ளனர்.

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம் தமிழகத்தில் ஒரு வாரத்தில் ரூ 63 லட்சத்தை தியேட்டர் வசூலாகப் பெற்றுள்ளது.

விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார் கமல்ஹாஸன்.

பின்னர் படம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "நான் நாகேஸ்வரராவின் ரசிகன். இந்தப் படம் பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன். நாகேஸ்வரரராவுக்கு மிகச் சிறந்த முறையில் அஞ்சலி செலுத்திய நாகார்ஜூனா குடும்பத்தைப் பாராட்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment