தன் நண்பர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை நேற்று மாலை பார்த்துப் பாராட்டினார் கமல் ஹாஸன்.
கோச்சடையான் படம் நாட்டிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் இந்தியத் திரையுலகின் அடுத்த கட்ட பயணத்துக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிக்கு ஆதரவு எப்படி இருக்குமோ என்று முதலில் திரையுலகினர் தயங்கினர். ஆனால் படம் வெளியானதும் கிடைத்த தாறுமாறான வரவேற்பு, அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்தது.
உலகம் முழுவதும் இந்தப் படம் பெரும் வரவேற்பும் வசூலும் பெற்று ஓடிக் கொண்டுள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் காதலனான கலைஞானி கமல் ஹாஸன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்.
அவருக்காக தி நகரில் உள்ள ரியல் இமேஜ் அரங்கில் இந்தப் படத்தைத் திரையிட்டார் சவுந்தர்யா ரஜினி.
கமலும் கவுதமியும் இந்தப் படத்தை நேற்றுப் பார்க்க வந்தனர். அவர்களை வரவேற்று தியேட்டருக்கு அழைத்துப் போய், கோச்சடையானைத் திரையிட்டார் சவுந்தர்யா.
ஆர்வத்துடன் படம் பார்க்க கமல், படம் முடிந்ததும் சவுந்தர்யாவைப் பெரிதும் பாராட்டினார். படம் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் வந்திருப்பதாகத் தெரிவித்து வாழ்த்தினார்.
Post a Comment