தனுஷும் அக்ஷராவும் மிகவும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான நடிகர்கள் என பாராட்டியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.
பால்கி இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ், அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில் நடந்து வருகிறது.
தனுஷ் மற்றும் அக்ஷராவின் தொழில் நேர்த்தி குறித்து பெரிதும் சிலாகித்த அமிதாப் பச்சன், "இந்தப் படத்தில் தனுஷும் அக்ஷராவும் எனது சக நடிகர்கள். தென்னகத்துக்கே உரிய நேர்த்தியையும் ஒழுக்கத்தையும் அவர்களிடம் காண்கிறேன். மிகச் சிறந்த கலைஞர்கள்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் நடிப்பைப் பார்க்கப் பார்க்க அவர்களின் மீதான என் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது...
நீலகிரிக்கு பல முறை நான் ஷூட்டிங்குக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அலுக்காத லொகேஷன் இது...," என்றார்.
Post a Comment