மும்பை: தேவர் இந்தி படப்பிடிப்பில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரவுடியாக நடித்த நடிகரால் கையில் ரத்தம் கட்டிவிட்டது.
ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை
தேவர் படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,
காட்சி ஒன்றில் ரவுடியாக நடிக்கும் நடிகர் ஒருவர் என் கையை மிகவும் இறுக்கமாக பிடித்தார். அவர் கை மிகவும் பெரியதாக வேறு இருந்தது. விளைவு என் கையில் ரத்தக்கட்டு என்றார்.
படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு காயம் ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment