சென்னை: அஜீத் இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் நடிக்க 3 கன்டிஷன்கள் போட்டாராம்.
அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் 'தல 55' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும், அனுஷ்காவுக்குமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் நடிக்க அஜீத் கௌதம் மேனனுக்கு 3 கன்டிஷன்கள் போட்டாராம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
எனக்காக எதையும் செய்யக் கூடாது. கௌதம் மேனன் படத்தில் அஜீத் ஒரு பங்கு வகித்தார் என்று தான் இருக்க வேண்டுமே தவிர மாற்று விதமாக இருக்கக் கூடாது. எனக்காக படத்தில் தேவையில்லாமல் பஞ்ச் வசனங்கள் வைக்கக் கூடாது என்பது தான் அந்த கன்டிஷன்கள் ஆகும்.
படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரம் போலீஸாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment