அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு இணையான வேடத்தில் த்ரிஷா!

|

அஜீத் -55 படத்தில், அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

அஜீத் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு இணையான வேடத்தில் த்ரிஷா!

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

த்ரிஷாவுக்கு இரண்டாவது கதாநாயகி வேடமா என்ற கேள்வி, செய்தியாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, கவுதம் மேனன் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், 'த்ரிஷா இரண்டாவது நாயகி கிடையாது. அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட நாயகி வேடத்தில்தான் நடிக்கிறார். காரணம், இந்தக் கதையை த்ரிஷாவை மனதில் வைத்துதான் கவுதம் மேனன் எழுதினார்,' என்று குறிப்பிட்டுள்ளர்.

 

Post a Comment