திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்

|

திருப்பதி திருமலை கோயிலுக்குச் சென்ற நடிகர் சித்தார்த், தலையை மொட்டை போட்டுக் கொண்டார்.

தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இரண்டு படங்களுமே முடிந்துவிட்டன. விரைவில் வெளி வரவிருக்கின்றன.

திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்

இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்றார் சித்தார்த். முதலில் மொட்டை போட்டுக் கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.

அடுத்து வரவிருக்கும் தனது ஜிகர்தண்டா படம் வெற்றி பெற கடவுளிடம் வேண்டிக் கொண்டார். சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதியில் சாமி கும்பிட்டார்கள்.

"திருமலைக்கு வந்து பிரார்த்தனை செய்வது எப்போதுமே மனசுக்கு நிறைவான விஷயம். இந்த முறை ஜிகர்தண்டா படம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்," என்றார்.

சித்தார்த்துக்கு தெலுங்கில் பொம்மரிலு படத்துக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment