இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

|

விரைவில் வெளியாகும் லேகர் ஹம் தீவானா தில் என்ற இந்திப் படத்துக்காக, தனக்கு வந்த ஒரு ஹாலிவுட் வாய்ப்பையே மறுத்துவிட்டாராம் ஏ ஆர் ரஹ்மான்.

ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லேகர் ஹம் தீவானா தில் (ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி).

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை ஆரிப் அலி இயக்குகிறார். அர்மான் ஜெய்ன், தீக்ஷா சேத் நடிக்கிறார்கள்.

இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

இந்தப் படம் வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் ஜூன் 12-ல் படத்தின் இசை வெளியாகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தனக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பை மறுத்துவிட்டாராம் ரஹ்மான். ஆனால் ஹாலிவுட்காரர்களோ, 'நீங்க வந்தா மட்டும் போதும்..' என ரஹ்மானுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

ரஹ்மான் தற்போது இந்தி மற்றும் தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment