கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு சத்யா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இயக்குநர் கவுதம் மேனன் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அஜீத், சத்யதேவ் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு தலைப்பாக சத்யா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.
அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது மலேசியாவில் நடந்து வருகிறது.
ஹாலிவுட் படங்களைப் போல, இந்தப் படத்துக்கு அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் திட்டம் இருப்பதாக கவுதம் மேனன் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது ஜாஸன் போர்னே மாதிரி, ஒரே கேரக்டர்... ஆனால் வெவ்வேறு கதைகள் என்ற பாணியில் சத்யா படத்தின் தொடர்ச்சிகள் இருக்குமாம்.
ஆனால் அடுத்தடுத்த தொடர்ச்சிகளுக்கும் அஜீத் கால்ஷீட் தருவாரா என்ற பிரச்சினை இருக்கிறதே!
Post a Comment