சென்னை: மில்க் நடிகை வெற்றி இயக்குனரை திருமணம் செய்து செட்டிலாக உள்ளதால் அவரது படங்களை கைப்பற்ற நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.
மில்க் நடிகை தான் காதலித்த வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளார். இந்நிலையில் மில்க் நடிகையின் படங்களுக்கு வேறு ஹீரோயின்கள் தேடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து அறிந்த கோலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகிகள், தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நாயகி ஒருவர் மற்றும் முத்த மன்னனின் மகள் ஆகியோர் அந்த படங்களின் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்களாம்.
இதில் சின்ன சில்கிற்கு 2 படங்கள் கிடைத்துள்ளதாம். மில்கும், அவரது காதலரும் காதலை ரகசியமாக வைக்க அதை இயக்குனர் ஒருவர் மேடையில் பேசுகையில் ஊருக்கே தெரிவித்துவிட்டார்.
அதன் பிறகு தான் காதல் ஜோடி தங்கள் காதல் பற்றி வாய் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment