உயர்ந்த ஹீரோவை பின்தொடரும் வாரிசு நடிகை: கடுப்பில் இயக்குனர்

|

சென்னை: வாரிசு நடிகை ஐ ஆம் ரெட் மேன் நடிகர் செல்லும் இடமெல்லாம் உடன் செல்கிறாராம்.

வாரிசு நடிகை ஒருவர் கோலிவுட்டில் நுழைந்த கையோடு ஐ ஆம் ரெட் மேன் நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார். இது குறித்து நடிகையிடம் கேட்டால் இந்த கிசுகிசுக்களை கேட்டு போரடித்துவிட்டது. எனக்கும், அந்த நடிகருக்கும் இடையே ஒன்றும் இல்லை என்கிறார்.

இந்நிலையில் ஐ ஆம் ரெட் மேன் நடிகர் நடிக்கும் பிரார்த்தனை படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நடிகை சென்றுவிடுகிறாராம். அங்கு அவர் கேரவனுக்குள் இருந்துகொள்ள ஷாட் முடிந்த கையோடு நடிகரும் கேரவனுக்குள் புகுந்துவிடுகிறாராம்.

ஷாட்டை ரெடியாக்கிவிட்டு கேரவனுக்குள் நடிகையுடன் இருக்கும் ரெட் மேனை அழைக்க உதவி இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். பரபரவென படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்கு பெயர் போன இயக்குனர் நடிகையால் படப்பிடிப்பு தாமதமாவதை பார்த்து கடுப்பில் உள்ளாராம்.

 

Post a Comment