சென்னை: நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ராஜ் மல்லிகா என்ற மனைவியும், மீனா என்கிற மகளும் உள்ளனர். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
Post a Comment