கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு

|

கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் - சிம்பு இணைந்து சட்டென்று மாறுது வானிலை என்ற தலைப்பில் படம் தொடங்கினர். ஆனால் அந்தத் தலைப்பு ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு

ஆனாலும் படத்துக்கான ஷூட்டிங் சில தினங்கள் நடந்தது. பின்னர் அதுபற்றி எந்த செய்தியும் இல்லை. கவுதம் மேனன் அடுத்து அஜீத்தின் படத்தை இயக்கப் போய்விட்டார்.

இதனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சிம்பு. "இந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜீத் படத்தை முடித்துவிட்டு கவுதம் மேனன் வந்ததும் எனது படம் தொடங்கிவிடும்," என்று கூறியுள்ளார் சிம்பு.

 

Post a Comment