சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி.. புதிய படம் தொடக்கம்!

|

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

ஜெயம் ரவி தற்போது அவருடைய அண்ணன் எம்.ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அடுத்து ‘எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து ‘ரோமியோ ஜூலியட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த புதிய படப் பூஜை நேற்று நடந்தது.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி.. புதிய படம் தொடக்கம்!

‘தலைநகரம்', ‘மருதமலை', ‘படிக்காதவன்' போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்குகிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கிறது.

ஜெயம் ரவியின் 27-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேசி வருகின்றனர். மற்ற நடிக நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

நேற்று நடந்த படத்தின் பூஜையில் நடிகர் ஜெயம் ரவி, மற்றும் அவரது அப்பாவும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன், அம்மா வரலட்சுமி, நடிகர்கள் சூரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment