திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சோலார் ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சோலாப் ஸ்வப்னம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பல பெருந்தலைகளை உருட்டிய விவகாரம் சோலார் ஊழல் வழக்கு. இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஆட்சியிலிருந்தவர்களை வளைத்துப் போட்டு பல கோடியை அவர் சுருட்டியதாக கூறப்பட்டது.
நடிகை ஷாலு மேனனுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஊழலை மையமாக வைத்து மலையாளத்தில் சோலார் ஸ்வப்னம் என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது.
இந்த படத்தை ராஜு ஜோசப் என்பவர் தயாரித்துள்ளார். படத்தை வெளியிடக்கூடாது என்று சோலார் ஊழலில் சம்பந்தப்பட்ட சரிதா நாயரும் பிஜு ராதாகிருஷ்ணனும் தன்னை நேரில் மிரட்டியதாக அவர் சமீபத்தில்தான் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சோலார் சொப்னம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பிஜு ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Post a Comment