மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!

|

மஞ்சப்பை படத்தின் திருட்டு வீடியோ டிவிடியாகவும் இணையத் தளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

கடந்த வாரம் வெளியானது மஞ்சப்பை திரைப்படம். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளில் படத்தின் திருட்டு வீடியோ நல்ல தரத்துடன் இணையதளங்களிலும், டிவிடியாகவும் வெளியானது.

மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!

இதை நாம் சில தினங்களுக்கு முன்பே செய்தியாக வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘மஞ்சப்பை' சினிமா இயக்குநர் ராகவன் உள்பட 10 பேர் இன்று சென்னை போலீஸ் கமினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

"அதில், ‘மஞ்சப்பை' திருட்டு டிவிடி சாத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில்தான் பதிவு செய்யப்பட்டு டிவிடியாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்தத் தியேட்டருக்கு இனி புதிய படங்கள் கொடுப்பதில்லை என்றும் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம்.

 

Post a Comment