மைக் மோகனை இன்றைய இளைர்களுக்கு எந்த அளவு நினைவிருக்குமோ தெரியவில்லை. ஆனால் முப்பதுகளைத் தாண்டிய அத்தனைப் பேருக்கும் அவரை ஒரு வெள்ளி விழா நாயகனாகத் தெரியும்!
அவர் நடிப்பு எப்படி இருந்தாலும், தன் வசம் பல சாதனைகளை வைத்திருப்பவர் மோகன்.
இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம்.
பெரும்பாலும் பாடகராகவே பல படங்களில் நடித்ததால் அவருக்கு மைக் மோகன் என்று ஒரு பட்டப்பெயர்.
தொன்னூறுகளில் காணாமல் போன மோகன், சில ஆண்டுகளுக்கு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கினார். பின்னர் சுட்ட பழம் என்ற படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு பல கேரக்டர் ரோல்கள் கிடைத்த போதும், ஏற்க மறுத்துவிட்டார்.
ஆனால் தற்போது மோகன் நடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதையறிந்த வெங்கட் பிரபு, தன் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளார்.
சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரதான வில்லனாக நடிக்க மோகனிடம் பேசியுள்ளார் வெங்கட்பிரபு.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
Post a Comment