கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

|

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளாகும். இதையொட்டி பல்வேறு தலைவர்கள், திமுகவினர் திரளாக கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் இது அவரது 91வது பிறந்த நாள் என்பதால் திமுகவினரும் உற்சாகமாக அதைக் கொண்டாடினர்.

கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

மேலும், கிட்டத்தட்ட 14,48,683 பேர், குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநூல், டிவிட்டர் மற்றும் இணைய தளத்தின் வாயிலாகவும் கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, மைசூரில் கடந்த 35 நாட்களாக லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இன்று அவர் சென்னை திரும்பினார். திரும்பியதும், முதல் வேலையாக தனது நெருங்கிய நண்பரான திமுக தலைவர் மு கருணாநிதியைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி ஆகும். அன்றும் அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இருந்தாலும் இன்று நேரிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

 

Post a Comment