நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் 'சாமியாட்டம்'.
லேசான கதை, மென்மையான காட்சிகள், வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என உருவாகும் படம் இந்த ‘சாமியாட்டம்'.
நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வரும் நம்பியார் படம் விரைவில் வெளியாகிறது. சாமியாட்டம் இவரது இரண்டாவது சொந்தப் படம்.
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட இவர், தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி', ‘குட்டி', உத்தமப் புத்திரன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தவை.
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல் செய்த படமான ‘சுவாமி ரா ரா' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் (அதானே... ரீமேக் ஸ்பெஷலிஸ்டாச்சே!!).
படத்துக்கு ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி', 'என்னமோ ஏதோ' படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.
களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக் கதை.
படத்தின் நாயகியாக மும்பைப் பெண் ஒருவரை அறிமுகம் செய்கிறார்கள். பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கியமான ‘திடுக்' வேடத்தில் வருகிறார் பவர் ஸ்டார்!
Post a Comment