ஜில் படம்… சூடான காட்சிகள்… ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கிய ராம்கோபால் வர்மா

|

ஜில் படம்… சூடான காட்சிகள்… ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கிய ராம்கோபால் வர்மா

படத்திற்கு ஐஸ்கிரீம் என்று ஜில் தலைப்பு வைத்துவிட்டு சூடான காட்சிகளை நிறைய படமாக்கியிருக்கிறாராம் ராம்கோபால் வர்மா

திரில்லர் கதை

ஐஸ்கிரீம் ஒரு திகில்கதை, ராம்கோபால் வர்மாவின் புதிய அறிமுகமான தேஜஸ்வி மதிவதாதான் ஹீரோயின்.

ஜில் படம் சூடான காட்சிகள்

வீட்டில் தனியாக இருக்கும் அவர் தன் காதலன் வருகைக்காக காத்திருக்கிறார். காதலனும் வருகிறார். ஒரு காதல் ஜோடி தனி வீட்டில் இருந்தால் என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்கிறது.

பயத்தோடு நகரும் கதை

வந்திருப்பது காதலன் அல்ல என்பது இண்டர்வெல் பிளாக். அப்படியென்றால் வந்தவன் யார் என்பது கதையின் அடுத்த பகுதி. பாதி பயத்தையும், பாதி காமத்தையும் கேமராவே காட்டி விடுமாம்.

பத்துகோடி வியாபாரம்

ராம்கோபால் வர்மாவின் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். படத்தின் பட்ஜெட் ரூ. 75 லட்சம் விற்பனையோ 10 கோடியை எட்டுமாம்.

நவீன முறை ஒளிப்பதிவு

ப்ளோஸ்காம் என்ற நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஞ்சி டோப். இப்போது பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஸ்டெடி கேம் என்ற கேமராவை அறிமுகப்படுத்தியதும் ராம்கோபால் வர்மாதான்.

தெலுங்கு, இந்தி

தெலுங்கிலும், இந்தியிலும் படத்தை வெளியிட இருக்கிறார்கள். தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment