தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது.
தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது.
படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன. அதையும் தாண்டி படத்துக்கு ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் பெரும் பலமாக அமைந்துவிட்டது.
படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ 20 கோடியை இந்தப் படம் அள்ளிவிட்டது.
இது தவிர, வெளிநாட்டு வசூல், தொலைக்காட்சி உரிமை, அண்டை மாநில வசூல் போன்றவை ரூ 15 கோடியைத் தாண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தமிழில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவே.
Post a Comment