ஹைதராபாத்: தெலுங்கின் நம்பர் ஒன் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் ரூ 2 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆகடு படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இப்போது தன் அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
கொரட்டா சிவா இயக்கும் இந்தப் படத்தின் பூஜை வரும் செப்டம்பரில் நடக்கிறது. எப்போதுமே தன் படத்துக்கு பக்காவாகத் திட்டமிடும் மகேஷ்பாபு, தெலுங்கில் இப்போது படு பரபரப்பான நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் என டாப் நடிகைகள் இந்த வாய்ப்புக்கு முண்டியடித்தும், மகேஷ் பாபு மனசு இந்த முறை ஸ்ருதி ஹாஸனின் எடுப்பான கவர்ச்சியை நாடிவிட்டதாம்.
தமிழில் இரண்டு மெகா படங்கள் மற்றும் இந்தியில் இரு படங்கள் என படு பிஸியாக இருந்தாலும், கூப்பிடுவது மகேஷ் பாபுவாச்சே என்பதால் கஷ்டப்பட்டு கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் ஸ்ருதி.
தனக்காக இவ்வளவு அட்ஜஸ்ட் செய்துள்ள ஸ்ருதியைக் குளிர்விக்கும் விதத்தில், அவருக்கு சம்பளமாக ரூ 2 கோடியைத் தர முன்வந்துள்ளாராம் மகேஷ் பாபு (தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், ஹீரோயினுக்கு சம்பளம் பேசுவது ஹீரோதானே!).
ஆக, ஹைதராபாதிலும் ஸ்ருதிக்கு ஒரு ஆடம்பர பங்களா ரெடி!
Post a Comment