விழாவுக்கு 'பவர்' வந்தால் நாங்கள் வர மாட்டோம்: ஹீரோக்கள் அடம்

|

சென்னை: இசை வெளியீட்டு விழாவுக்கு பவர் நடிகரை அழைப்பது பெரிய ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லையாம்.

அண்மை காலமாக இசை வெளியீட்டு விழாக்களுக்கு பவர் நடிகரை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். அப்படி அவரை அழைப்பது பெரிய ஹீரோக்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். பவர் வந்தால் இவர்களுக்கு என்ன என்று தானே நினைக்கிறீர்கள். மேட்டர் இருக்கே.

ஹீரோக்கள் விழாவுக்கு வருகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் பவர் மேடையில் பேசினால் விசில் பறப்பதுடன் கைதட்டல் காதை கிழிக்கிறதாம். இது பவரை நக்கலடித்து தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இருந்தும் நம்மை விட அவருக்கு கைதட்டல் அதிகமாக இருக்கிறதே என்று நினைக்கிறார்களாம் ஹீரோக்கள். அதனால் இனி எந்த விழாவாக இருந்தாலும் சரி பவர் வந்தால் நாங்கள் வர மாட்டோம் என்கிறார்களாம் ஹீரோக்கள்.

இதையடுத்து வேறு வழியின்றி பவரை விழாக்களுக்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்களாம்.

 

Post a Comment