சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்ன நம்பர் நடிகை, தனக்குப் பொருத்தமான நாயகர்கள் பற்றி ஒரு பட்டியல் வெளியிட்டார்.
அதன்படி, கோட்சூட் நடிகருடன் தனக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகக் கூறிய நாயகி, லீடர் நடிகருக்கு ஐந்தாம் இடத்தை அளித்தார்.
ஏற்கனவே, அடுத்த உச்ச நடிகர் யார் என்ற பரபரப்பான போட்டி மேற்கூரிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே கொளுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில் அம்மணி கூறிய பட்டியலில் கோட் நடிகருக்கு முதலிடமும், லீடர் நடிகருக்கு கடைசி இடமும் அளிக்கப் பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நம்பர் நடிகை லீடர் நடிகரும் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான். நல்ல கெமிஸ்ட்ரி இல்லாமலா தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்தார் என லீடர் நடிகரின் ரசிக்ர்கள் நடிகை மீது கோபத்தில் உள்ளார்களாம்.
நம்பர் நடிகை தற்போது கோட் நடிகருடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெரியாமல் இப்படி உளறிக் கொட்டி லீடர் நடிகரின் பகைமையைச் சம்பாரித்து விட்டோமே என கவலைப் பட்டு வருகிறாராம் நடிகை.
Post a Comment