சதுரங்க வேட்டையில் வில்லனாக சித்தரிக்கப்படும் சீமான்?- நாம்தமிழர் கட்சியினர் அதிர்ச்சி

|

சென்னை: சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள படம் சதுரங்க வேட்டை. நேற்று ரிலீஸ்ஆன இந்த திரைப்படம் ஒரு மோசடிபேர்வழியைப் பற்றிய கதை.

சதுரங்க வேட்டையில் வில்லனாக சித்தரிக்கப்படும் சீமான்?- நாம்தமிழர் கட்சியினர் அதிர்ச்சி

பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக விளங்கும் நட்ராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே மிளகா படத்தில் நடித்துள்ளார்.

மாஸ் ஓபனிங்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் விளம்பரங்களை செய்தனர். எனவே சதுரங்க வேட்டை படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.

வில்லனின் தமிழ் பேச்சு

சதுரங்க வேட்டை படத்தில் பிரதான வில்லனாக வளவன் என்பவர் நடித்திருக்கிறார். இந்த வில்லன் பாத்திரம் சுத்தமான தமிழ் பேசுகிறவராக அமைக்கப்பட்டிருக்கிறது.

சீமான் போல பேச்சு

இந்த வில்லன் கதாபாத்திரம் சீமானை நினைவுபடுத்துவதுபோல் உள்ளதாக சொல்கின்றனர் படத்தை பார்த்தவர்கள். பிற மொழிக்கலப்பு இல்லாமல் சுத்தமான தமிழில் பேசுகிறவர் சீமான் என்பதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

அரசியல் டச்

இடையே இடையே கூட்டம் இருக்கிறது. அதற்கு ஆட்களை திரட்ட வேண்டும் என்றெல்லாம் வசனங்களை வைத்து அரசியல் டச்சும் கொடுத்திருக்கிறார்கள்.

இழிவுபடுத்தப்படும் சீமான்

அந்த வில்லன் கதாபாத்திரம் கொலை செய்கிறது. கொள்ளையடிக்கிறது. இதைக்கண்ட நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

படம் பார்க்கணும்

இதை சீமானிடம் சொல்ல, அவரோ படத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். அதற்குள் சுங்கச் சாவடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஏன் இந்த பஞ்சாயத்து

சீமானின் பகலவன் கதையை சுட்டு சூர்யாவிடம் சொன்னார் லிங்குசாமி. சீமான் சூர்யாவிடம் முறையிட, வேறு கதையை ரெடிபண்ணச் சொல்லி லிங்குசாமியிடம் கூறினார் சூர்யா. அதன்பிறகு தயாரானதுதான் அஞ்சான்.

பழிக்குப் பழி

இதனால் அவமானமடைந்ததாக நினைத்த லிங்குசாமி, அதற்கு சதுரங்க வேட்டைப் படத்தை பயன்படுத்திக்கொண்டார் என்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்துக்காகவே சதுரங்கவேட்டை படத்தினை வாங்கி வெளியிட்டுள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எது எப்படியோ எல்லாம் அந்த சாமிக்குத்தான் வெளிச்சம்.

 

Post a Comment