"கூலிங்கிளாஸ் அணிந்து என்கிட்ட பேசக்கூடாது"- நடிகையின் கறார் கண்டிஷன்

|

சென்னை: கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு கண்ட இடத்தையும் ரகசியமாக பார்க்கும் ஹீரோக்கள் மீது அதிருப்தியிலுள்ளாராம், உயரமான சிங்கம் நடிகை.

தமிழ், தெலுங்கு என ரொம்பவே பிசியாக இருப்பவர் உயரமான சிங்கம் நடிகை. சமீபத்தில், தெலுங்கு திரைப்பட சூட்டிங் இடைவேளையின்போது, நடிகர் ஒருவர், நடிகையின் அருகே வந்து அமர்ந்து, ஜொள்விட்டபடி பேசிக்கொண்டிருந்தாராம்.

கூலிங் கிளாஸ் போட்டபடி, அந்த நடிகர் பார்வை அங்குலம், அங்குலமாக தனது உடலின் சில பகுதிகளை துலாவுவதை நடிகை பார்த்துவிட்டாராம்.

இதனால் கோபமடைந்த நடிகை, சிங்கமாக சீறியுள்ளார். அருந்ததியாக எழுந்து ஆடி தீர்த்துவிட்டாராம். உடனே கண்ணாடியை கழற்றிவிட்டு பேசு, அல்லது இங்கிருந்து கிளம்பிச் செல், என சத்தம்போட்டுள்ளார்.

இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான அவர், இதை தனது நட்பு வட்டாரங்களிடம் சொல்லி பொருமிக் கொண்டுள்ளாராம்.

அந்த பெண் சிங்கம், இப்போது தமிழிலில் இரு பெரும் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த கூலிங்கிளாஸ் சம்பவங்கள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் நடிகை பேசும்போது, தமிழ் ஹீரோக்களைவிட, தெலுங்கில் பெரும்பாலானவர்கள் ஜொள்ளு பார்ட்டிகளாக இருப்பதாக குறை கூறியுள்ளார்.

தமிழிலில் கண்ணை மட்டுமே பார்த்து பேசும் கண்ணியமான ஹீரோ என்ற சர்ட்டிபிகேட்டையும் ஒரு முன்னணி ஹீரோவுக்கு அந்த பெண் சிங்கம் வழங்கியுள்ளது.

பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்து பழக கூடியவர் என்று நடிகை கூறியது, அமர்க்களமான, அட்டகாசமான, வீரமான ஹீரோவையாம். அம்மணி கூறிய வார்த்தைகள், நட்பு வட்டாரத்தில் இருந்து விரிவடைந்து, ஆயுரம் தோட்டாக்களாக பல பகுதிகளிலும் பாய்ந்து வருகின்றன.

 

+ comments + 1 comments

selvi
3 July 2014 at 20:30

please wear decent dresses to act in the cinema. if u r wear good dresses they r not seeing your beauty.

Post a Comment