சென்னை: நான் இஸ்லாத்திற்கு மாறவில்லை. ஆனால் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட்டு வந்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் தொப்பி அணிந்து நடிகர் ஜெய்யும் வெளியே வந்த புகைப்படங்கள் வெளியாகின.
இதை பார்த்தவர்கள் ஒரு வேளை ஜெய் மதம் மாறிவிட்டாரோ என்று நினைத்தனர். ஆனால் அவர் தான் மதம் எல்லாம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் மதம் மாறியதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை. எந்த கடவுளையும் கும்பிடாமல் இருந்த நான் தற்போது ஒரு கடவுளை வணங்குவது நல்ல விஷயம். நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதை ஏன் வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
ஜெய் இஸ்லாத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகை மோனிகா இஸ்லாத்திற்கு மாறி நடிப்புக்கு முழுக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment